மட்டக்களப்பில் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!!

மட்டக்களப்பில்உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை  இன்று கையளிக்கப்பட்டது.

பியன் (FIAN) நிறுவனத்தின் உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கையானது பியன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஸ்வலிங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் (22) கையளிக்கப்பட்டது.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டத்தில்  வீட்டு உணவு பாதுகாப்பின்மை மற்றும் உணவு முறைகளை 20  பிரதேச செயலக பிரிவுகளில் ஆறுமாத காலம் மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கை வை.எம்.சி. ஏ மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான தெளிவூட்டல் இதன் போது வழங்கப்பட்டது.

1500 க்கு மேற்பட்ட நபர்களிடம்  கருத்துக்களை பெற்று ஆய்வு செய்து மக்களின் போசாக்கு அறிவு தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த உணவு அணுகலை மக்கள் மத்தியில்  மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறைப்பதற்கும், சமமான உணவு முறைகளை நிறுவுவதற்கு தேவையான அவசியம் இதன் போது கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு போசாக்கு தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் பியன் நிறுவன உணவு தொழில்நுட்ப நிபுணர் எம்.மொஹமட் பாஸ்லி, கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் திருமதி அமுதினி சுகிர்தன் மற்றும் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ். ரவிராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







Powered by Blogger.