கணனிப் பயிற்சி நெறியை நிறைவுசெய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் Smart Sri Lanka தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் வழங்கப்பட்டுவரும் இலவச கணனிப் பயிற்சி (Computer Application Assistant  Course) நெறியினை இதுவரை இரு பிரிவினர் (2 Batch) நிறைவு செய்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இச்செயற்திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாடல்களை வழங்கிவரும் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் ( 21) நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

மேலும் இக்கற்கைநெறியின் இணைப்பாளராகவும் வளவாளராகவும் செயற்படும் ஏ.ஆர்.எம்.பாஸில் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் இம் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கிய ஏ.கருணாகரன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோருடன் உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம்.றிழா, மனிதவள அபிவிருத்தி பிரிவின் இணைப்பாளர் டபிள்யூ.மைக்கல் கொலின் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான   வை.சுகிர்தராசா, வி.திருவானந்தராசா, கே.திசன், திருமதி பி.தெய்வேந்திரகுமாரி என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.