சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பில் இன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இடம் பெற்ற சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி விழாவான மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
சுவாமி விவேகானந்தரின் திருச்சுருப பவனியானது கல்லடி உப்போடை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பழைய கல்முனை வீதி வழியாக சென்று கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மீண்டும் ராமகிருஷ்ண மிஷனை வந்தடைந்தது.
விசேட பூசை வழிபாடுகள், பஜனை, சிறப்பு ஆராத்தி என்பன நிகழ்த்தப்பட்டு சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி தின விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இதில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் உதவி மேளாலர் உமா தீஷானந்தா ஜீ மஹராஜ் உள்ளிட்ட அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.