திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச செயலகப்பிரிவின் இவ் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது (28) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மொறவெவ பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரனின் ஒருங்கினைப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மொறவெவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரொஷான் அக்மீமன தலைமையில் இடம் பெற்றது.
2025 ஆண்டில் மேற்க்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பொது பிரச்சினைகள் பல ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக காட்டு யானை மனித மோதல்கள், நீர்பாசனப் பிரச்சினைகள் காணிப் பிரச்சினைகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.
![]() |