அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பில் பல்வேறு திட்டங்கள் அமுலாக்கம் - அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அக்ஷன் யுனிடி லங்கா (AULANKA) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன் தலைமையில்  புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜீ.சுரேஸ் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிரதேச செயலாளர்களான நமசிவாயம் சத்தியானந்தி, காசு சித்திரவேல், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன், பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் உத்தியோகத்தர்,  அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதன் போது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனமானது கிரான், வவுணதீவு, மண்முனை வடக்கு உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கவுள்ள மற்றும் முன்னெடுத்துவருகின்ற திட்டங்களான பாலர் பாடசாலை சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு திட்டங்கள். சிறுவர்களுக்கான சத்துமா திட்டம், விவசாயி மேம்பாட்டு திட்டங்கள், குளங்கள் புனரமைத்தல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாண்மை மேம்பாட்டு திட்டங்கள்  உள்ளிட்ட மேலும் பல திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தின் முகாமையாளரினால் அளிக்கை செய்யப்பட்டதுடன், இத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பான ஆலோசனைகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













Powered by Blogger.