இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்ப தற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது, இது ஒரு வரவேற்கத் தக்கது. முதன் முறையாக தேசிய கட்சிக்கு வடக்கு கிழக்கிலே 12 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்பது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் நமக்கு கணிசமான வாக்களித்த மக்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாது விட்டால் தமிழ் தேசியம் என்பது எங்கு செல்லும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு அதிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே தலைமை தாங்கி நடத்த வேண்டிய தேவை இருந்த காரணத்தினால் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தேன். இருப்பினும் இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிடமாட்டேன் ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன்.
சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் அரியம் கூட சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் இதன் காரணமாக நமக்கு ஆதரவு குறைந்திருந்தது
புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப் படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது.
துறை சார்ந்த நிபுணர்களின் அமைச்சர் அவையாக நான் பார்க்கின்றேன், முதன் முறையாக வடக்கில் தேசிய கட்சிக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத் திருப்பது 2 மாவட்டங்களில் முன்னிலை வைத்திருப்பதும் கிழக்கிலே இரண்டு மாவட்டங்களில் முன்னிலை வைத்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே 12 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்பது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.