பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தின் மீது தாக்குதல்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு காரியாலயம் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அப்துல் வஹாபின் அலுவலகம் நள்ளிரவு வேலையில் இனந்தெரியதாத நபர்களினால் சேதப்படுத்ப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அலுவலகத்தின் பெனர் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அலுவலகத்தினை தீ மூட்ட எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.