வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் - PAFRAL அமைப்பு!

வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246 ஆகும்.

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240ஆக பதிவாகியுள்ளது.

 


 

Powered by Blogger.