மட்டக்களப்பில் தொழுநோய் விழிப்புணர்வும் இயற்கை நேய நாட்டுக்கோழி கண்காட்சியும்!!

மட்டக்களப்பில்  தொழுநோய் விழிப்புணர்வும் இயற்கை நேய நாட்டுக்கோழி கண்காட்சி நிகழ்வானது அருட்பணி ரி.எஸ்.யோசுவா தலைமையில் அமெரிக்கன்மிஷன் மண்டபத்தில் நேற்று (15) திகதி இடம் பெற்றது.

"பிரபஞ்ச நேசம்" எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

தொழுநோயை முற்றாக அகற்றுதற்கு மக்கள் மத்தியில் தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்  காவேரி கலாமன்றத்தினால் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொழுநோயை பூரணமாக குணப்படுத்துவதற்கான மருத்துவம் தற்போது காணப்படுகின்ற போதும் மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வின்மைமே இந் நோய் பரவுவதற்கான பிரதான காரணமாக உள்ளது.

இந் நிகழ்வில் 21 வகையான  நாட்டுக்கோழிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அவற்றின் தன்மை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது சிறப்பான முறையில் கோழிகளை பராமரிப்பவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் காவேரி கலாமன்றத்தின் இணைப்பாளர் அருட் தந்தை ஏ. எஸ். ரூபன், விவசாய போதனாசிரியர்கள், கால்நடை  திணைக்கள அதிகாரிகள், கோழி பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








Powered by Blogger.