மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டுத்துறை சார்ந்த பழைய மாணவிகளை ஒருங்கிணைக்கும் விளையாட்டுப் போட்டி கடந்த
(16,17) திகதிகளில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வெபர் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பழைய மாணவிகளை ஒன்றிணைத்து கௌரவிக்கும் முகமாக பாடசாலையில் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பெற்றிமா பிரான்சிஸ் தலைமையில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில்
பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் ஆலோசகர் சரண்யா ரவிக்குமார், இந் நிகழ்வின் ஒழுங்குமைப்பாளர் சூசன்னா ஸ்டெப்னி சஞ்சய் பிரதீபன், மற்றும் கடந்த காலங்களில் பாடசாலையின் விளையாட்டு துறையில் தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாகாணமட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.