திடீர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தயாராகிறது.
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிலைய அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காவிடின் திடீர் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கியுள்ளதாகத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.