மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயன்குடா பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்..
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபர் ஒருவர் காயன்குடா வயல் பகுதியில் கூலி வேலைக்காக சென்ற வேளையே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்திற்கு வருகைதந்துடன் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.
கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.