மருத்துவ கட்டுரைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதை மட்டு.துஷாராவிற்கு!!

மருத்துவ கட்டுரைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதை மட்டு.துஷாரா பெற்றுக் கொண்டார்.

இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் ஆசிரியர்கள் சங்கம் வருடாந்தம் வழங்கி வருகின்ற 26வது தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருது" EMPIRE BALLROOM MOUNT LAVINIA ஹோட்டலில் இன்று (20) இடம்பெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) என்ற புனைப்பெயரில் தமிழன் வாராந்த "ஹெல்த்" சஞ்சிகையில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை கடந்த ஆண்டில் தொடராக எழுதிய சிறந்த பத்திரிகையாளர் என்ற விருதும், சான்றிதழும் இவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை வீரகேசரி பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் சிறி கஜன் வழங்கி வைத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த பத்திரிகையாளர் விருதின்போது, அவ்வாண்டிலும் சிறந்த மருத்துவ கட்டுரைகளை தொடராக எழுதி "சிறந்த பத்திரிகையாளர் விருதினை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.