மட்டக்களப்பில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பு போன்ற விடையங்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் த.ஜெய்தனனின் ஏற்பாட்டில் (08) திகதி சன்சைன் கிரான்ட் விடுதியில் இடம் பெற்றது.

தொகை மதிப்பு  ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்ட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 14 வது குடிசன , வீட்டுவசதிகள் தொகை மதிப்பு மேற்கொள்ளவிருப்பதனால் அவற்றை திறன்பட மேற்கொள்வதற்கு தேவையான தெளிவூட்டல்கள் மற்றும் வழிகாட்டங்கள் இதன் போது விரிவாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், வெளிக்கள முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.மன்சூர், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜெ.எஸ்.லியனகே, பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
















Powered by Blogger.