கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக செயற்படுகின்றார் - இராஜநாதன் பிரபாகரன்!!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணிலின் பெயரை பயன்படுத்தி பல சட்டவிரோத நடவடிக்கைகளை செய்வது மட்டுமல்லாது ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக செயற்படுகின்றார் என இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஈரோஸ் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கல்லடியில் இடம் பெற்ற போது கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை தமிழ பிரதேச செயலகம் தர முயர்த்தப்பட்டு விட்ட நிலையில் அதற்கான ஆழுகையை வழங்குமாறு மக்கள் போராடுகின்றனர். மிக விரைவில் உரிய அமைச்சின் ஊடாக இதற்கான தீர்வை நான் பெற்றுக்கொடுப்பேன்.

கிழக்கு ஆளுநரால் இந்த மாகாணத்தை நடாத்த முடியாதுள்ளது, தோட்ட தொழிலாளர்களை புளிஞ்சி பல இலட்சங்களை கொள்ளையடிக்கும் செந்தில் தொண்டமானைப் பற்றி தெரியுமா?

இவர் அதிகாரிகளை வெருட்டி சில நிறுவனங்களுக்கு திருக்கோவில் முதல் திருகோணமலை வரை இல்மனைட் அகல்வதற்கு அனுமதி பெற்று கொடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் கொள்ளை காரர்கள் என்பதனால் செந்தில் தொண்டமானுக்கு எதிராக செயற்படமாட்டார்கள்.

ஜனாதிபதி கிழக்கு ஆளுனருக்கு எதிராக ஒரு கொமிஷனை போட்டு உடன் விசாரிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்தான் விரைவில் நடக்க இருக்கின்றது. ஜனாதிபதி ரணிலே ஆழுமையுள்ளவராக இருக்கின்றமையினால் நாம் அவருக்கே வாக்கழிக்க வேண்டும்.

பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது. என்னுடைய மக்கள், என்னுடைய மண் என்று தான் நான் அரசியல் செய்யிறனான். 

என்னால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக மிக விரைவில் கல்முனை பிர தேச செயலகம் ஆளுமை மிக்க பிரதேச செயலமாக இயங்கும் என உறுதியாக கூறுகின்றேன் என்றார்.


Powered by Blogger.