இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூறும் பெரிய வெள்ளி!!

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும்.

இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில்

புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மத்திய வீதி வழியாக சென்று வைத்தியசாலை வீதியை அடைந்து மீண்டும் பேராலயத்தை  வந்தடைந்தது.

அதே வேளை மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலும் பங்குத்தந்தை அருட்பணி லோறன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த சிலுவைப்பாதை நிகழ்வுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை நினைவுக்கூறும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.