மட்டக்களப்பு பொலிசாரின் இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகனவின் வழிகாட்டுதலின் கீழ் இப்த்தார் நிகழ்வு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று (31) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன, மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் லியனகே ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மத தலைவர்களின் ஆசியுடன் இப்த்தார்  நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம் பெற்றது. 

மாவட்டத்தில் இன மத நல்லுரவை மேம்படுத்தும் நோக்கிலேயே இஸ்லாமிய மக்களால் கடைப்பிடிக்கும் இப்த்தார் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பொலிசாரினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் இன மத பேதமின்றி  அனைவரும் எமது நாட்டை  நேசித்து, பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில்  231 இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள், விமானப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முப்படை வீரர்கள், வர்த்தக பிரமுகர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Powered by Blogger.