சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மார்க்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழி வகுக்கு எனும் தொனிப்பொருளில் உள்ளுர் உற்பத்தியாளர்களிற்கு சந்தை வாய்ப்பினை அம்மா மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் (20) திகதி முதல் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அம்மா மார்க்கெட்டிங் நிறுவனர்த்தின் முதலாவது கிளையினை கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் உள்ள Bridge Market இல் (20) திகதி திறந்து வைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாக திகழ்கின்ற கல்லடி பழைய பாலத்தில் (Bridge Market) இல் இவர்களுக்கான சந்தை வாய்ப்பை அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் ஏற்படுத்தி கொடுப்பதனால் பல சுய தொழில் முயற்சியாளர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவதாகவும், இவ்வாறான சந்தை வாய்ப்பை மேலும் பல இடங்களில் நிறுவ உள்ளதுடன், மட்டக்களப்பில் இருந்து உள்ளூர் உற்பத்திகளை வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சந்தை படுத்துவதுடன் ஏற்றுமதி செய்வதற்கும் அம்மா மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் முன்னின்று உழைக்கவுள்ளதாக அதன் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.

அம்மா மார்க்கெட்டிங் என்ற பெயரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது கிளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.