லாவண்யா மற்றும் நிலாம்சன் குறுஸ் ஆகிய இருவரும் மாவட்ட மட்ட பாடல் போட்டியில் முதலிடம்!!

கலாசார அலுவல்கள் திணைக்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட் செயலகம் ஆகியன இணைந்து. நடாத்திய மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான  அழகியல் திறனாக்கப் போட்டியின் கரோக்கி இசையுடனான பாடல் போட்டில் பெண்கள் சார்பில் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் லாவண்யா மகாதேவன் மற்றும் ஆண்கள் சார்பில் கிரான் பிரதேச செயலக உத்தியோகர்தர் நிலாம்சன் குறுஸ் ஆகிய இருவரும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான அழகியல் திறனாக்கப் போட்டி - 2025 இற்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் கோரப்பட்டு அவற்றிற்கான போட்டிகள் இடம் பெற்றுவந்த நிலையில் கரோக்கி இசையுடனான பாடல் போட்டியின் இறுதி சுற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (19) திகதி இடம் பெற்றது.

குறித்த போட்டியில் நாடகம், சிறுகதை, புகைப்படம், கவிதை மற்றும் பாடல் ஆகிய போட்டிகள் இடம் பெற்று வந்த நிலையில் ஏனைய அனைத்து போட்டிகளின் இறுதிப் போட்டிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றுவந்த நிலையில் பாடல் போட்டிக்கான இறுதி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் தலைமையில் இடம் பெற்றதுது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்குள் முதலிடத்தை பெற்றவர்களுக்கான  விருதினையும், பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

கலாபூசனம் அன்டனி சத்தியசீலம் பாய்வா மற்றும் கலாபூசனம் சடாற்சரம் ஆகிய இருவரும் நடுவர்களாக திறம்பட செயற்பட்டுள்ளதுடன், நிகழ்வின் ஒழுங்கமைப்பினை உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் ஜனாப் கே.மொகமட் றிழா அவர்கள் மேற்கொண்டிருந்ததுடன் குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 

அத்தோடு குறித்த போட்டி நிகழ்வுகள் அனைத்திலும் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான பெறுமதிமிக்க பரிசில்கள் மாவட்ட கலாசார இலக்கிய விழாவின் போது வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















Powered by Blogger.