மட்டக்களப்பு மேயர் சிவம்பாக்கியநாதனுக்கும் அவுஸ்திரேலிய பிரம்ம குமாரிகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சாள்ஸ் ஹூக் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு!!

மட்டக்களப்பு மேயர் சிவம்பாக்கியநாதனுக்கும் அவுஸ்திரேலிய பிரம்ம குமாரிகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சாள்ஸ் ஹூக் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இல்லத்தின் அழைப்பையேற்று  அவுஸ்திரேலிய பிரம்ம குமாரிகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சாள்ஸ் ஹூக்குடனான சந்திப்பில் மட்டக்களப்பு மேயர் சிவம்பாக்கியநாதன் ஈடுபட்டுள்ளார்.  

குறித்த சந்திப்பின் இறுதியில் சிரிப்பின் மகிமையைப் பற்றிய வாசகங்கள் அடங்கிய நினைவுப் படிகத்தினை அவுஸ்திரேலிய பிரம்ம குமாரிகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சாள்ஸ் ஹூக் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.