ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கான 43 வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு (21) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்  கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார  கலந்து கொண்டு அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்துள்ளதுடன், கட்சியின் செயற்பாட்டாளர்களுடன்  கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  "சிறிகொத" வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொறுப்பாளராக உள்ள திருமதி.துஷாரி பெரேரா, கல்குடா தொகுதி அமைப்பாளர் கலாநிதி எம்.வீ.முசாமில் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயற்பாட்டாளர்கள், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள், முன்னைய தேர்தல்களின் வேட்பாளர்களாக  களமிறங்கியவர்கள் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

Powered by Blogger.