இந்தியாவில் உயிரிழந்த சாந்தனிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பா.அரியநேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா வளாகத்தில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னால் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞரணி பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
சாந்தனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.