மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் வருட இறுதி ஒன்றுகூடல்!!


மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி அழகுதுரை யேசுதாசன் அடிகளாரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் தலைமையில் கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இயேசு பாலகனின் பிறப்பை நினைவுகூறும் முகமான பவனியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஒளி ஏற்றப்பட்டு வருவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

சர்வமத தலைவர்களின் ஆசியுரை மற்றும் விசேட சொற்பொழிவுகளை தொடர்ந்து, மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணராக செயற்பட்டுவரும் அருட்பணி அழகுதுரை யேசுதாசன் அடிகளாரிற்கு பிரியாவிடை நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது அடிகளாரின் சேவை நலனை பாராட்டி பல்சமய ஒன்றியத்தின் நிருவாக குழுவினரால் கவி பாடி, மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதேச பல்சமய நிருவாகிகளினால் அருட்தந்தைக்கு கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அடிகளார், பல்சமய ஒன்றியத்தின் உபதலைவர் ஹயாத்து மொகமட் சாஜஹான் மௌழவி, அமெரிக்கன் சிலோன் மிசனின் கிழக்கு பிராந்திய குருமுதல்வர் அருட்பணி எம்.லூகேயோன் (லூக்), கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட  இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டி, பல்சமய ஒன்றியத்தின் பொருளாளர்  இக்பால் மொகமட், பல்சமய ஒன்றியத்தின் நிருவாக குழு உறுப்பினர்கள், பிரதேச பல்சமய குழுக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.