மட்டக்களப்பு மாநகரசபைக்கு தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!!

மட்டக்களப்பு மாநகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் (Sandile Edwin Schalk) சாண்டிலே எட்வின் ஷால்க் விஜயம் ஒன்றினை இன்று (29) திகதி விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

மாநகரசபை ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கத்தினால் வரவேற்கப்பட்ட தென் ஆபிரிக்க உயா்ஸ்தானிகருக்கு  மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக  அளிக்கை மூலம் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இவ் விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர்,  உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் உள்ளிட்டோருக்கு மாநகர ஆணையாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகரசபையினை தமது நாட்டு உள்ளூராட்சி மன்றத்திற்கு நிகரான முறையில் மேற்படுத்துவதற்கு  தேவையான நடவடிக்கையினை தாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர், மாநகர சுகாதார பரிசேதகர் த.டமராஜ், தீயணைக்கும் படையின் பொறுப்பதிகாரி விவேகானந்தன் பிரதீபன் உள்ளிட்ட  உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


Powered by Blogger.