காத்தான்குடியில் மாணவர்களின் புத்தாக்கக் கண்காட்சி!!


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கோட்டத்தின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களின் "கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி" எனும் தொனிப்பொருளிலான  கோட்ட மட்ட புத்தாக்க கண்காட்சி இன்று (27) திகதி காலை 8.30 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பாடசாலையில் வைபரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

காத்தான்குடி கோட்டக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இப் புத்தாக்க கண்காட்சி நிகழ்வினை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

மாணவர்கள் மத்தியிலே ஆராய்சியுடன் கூடிய புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையிலும் (STEM) கல்வி முறையை நோக்கி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இளம் விஞ்ஞானிகளையும், கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கும் பொறிமுறையின் ஆரம்பகட்ட செயற்பாடாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெறுகின்றது.

இக்கண்காட்சியின் மூலம் காத்தான்குடி பிரதேச மாணவர்களின் புத்தாக்கமும், கண்டுபிடிப்பு ஆற்றலும் வெளிக் கொணரப்படுகின்றது.

குறி்த்த புத்தாக்க கண்காட்சி நிகழ்வு இன்றைய தினம் (27) பாடசாலை மாணவர்களுக்கும், நாளைய தினம் (28) பொது மக்களுக்குமாக இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ளது. 

இக் கண்காட்சியை பார்வையிட எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.