மட்டு முதல்வருக்கும், சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மீயுயர் பீட உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு!!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வருக்கும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மீயுயர் பீட உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று (26) திகதி மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய "சாமஸ்ரீ தேசமானிய"  உ.உதயகாந்த் தலைமையிலான மீயுயர் பீட உறுப்பினர்களே மாநகர முதல்வருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களால் முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் தொடர்பாக முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அத்தோடு எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்களுக்கு சமாதான நீதிவான்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவிருக்கும் பல சமூக நல திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலத்தில் மாநகர சபையினால் முன்னெடுப்பதற்காக திட்டமிடப்பட்டுவரும் விடையங்களை சுட்டிக் காட்டிய முதல்வர் எதிர்காலத்தில் சமூகப் பணிக்காக சமாதான நீதிவான்களின் ஒத்துழைப்பினையும் கோரியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் நிறைவில் அகில இலங்கை சமாதான நீதவான் சிவம் பாக்கியநாதன் அவர்கள் முதல்வராக தெரிவாகியமையினை முன்னிட்டும் அவரது தூர நோக்கு சிந்தனையுடனான மக்கள் நல திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டும் எனும் நோக்குடனும் அவரை பாராட்டி அமைப்பின் தலைவர் உள்ளிட்ட மீயுயர் பீட உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள "நீதியின் நிரல்" புத்தகமும் முதல்வருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் சமாதான நீதவான்கள் அமைப்பின் உபதலைவர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" எம்.வை.ஆதம், செயலாளர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" ரீ.லெட்சுமிகாந்தன், பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" சபாரெத்தினம் சுதர்சன், உபசெயலாளர் கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.









Powered by Blogger.