வாழைச்சேனை கிண்ணியடி கிராமத்திலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவு!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிண்ணியடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் தினகரன்பிள்ளை பிருந்தாபன் வரலாற்றில் முதல்தடவையாக இக் கிராமத்திலிருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற இவர் 2022 கல்வி பொதுதராதர உயர்தர பெறுபேற்றின் படி 03 A  சித்திகளைப் பெற்று  மாவட்ட மட்டத்தில் 10  வது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 402 வது இடத்தினையும் பெற்று இச் சாதனையினைப் படைத்துள்ளார்.

இவர் கல்வி பொதுதராதர சாதாரனதர பரீட்சையிலும்  09 A  சித்திகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.  

இப்பகுதி பொது அமைப்புக்கள், கல்வி சமூகத்தினர் தமது பராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இவர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தினகரன்பிள்ளை மற்றும் பிரதி அதிபர் தவமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.


Powered by Blogger.