நாங்கள் காலாகாலமாக வாழ்ந்துவந்த கணகர் கிராமத்தை எமக்கே மீட்டுத் தருமாறு மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கிராம மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த கிராமத்தில் உள்ள எங்களின் காணிக்குள் எம்மை செல்லவிடாமல் தடுக்கின்றார்கள் இது எந்த வகையில் நியாயம்? அரச அதிகாரிகளும் எம்மை கண்டுகொள்வதில்லை.
நாங்கள் 1972 ஆண்டு குடியேறி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 1900 ஆண்டு யுத்த பிரச்சனையின்போது தாய், சகோதரத்தை இளந்து கோமாரி பகுதியில் அகதிகளாக இருந்து கடும் துன்பங்களையும், துயரங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்தோம், பின்னர்
1994 ஆண்டு எமது கிராமத்தில் குடியேற நினைத்தாலும் அங்கு இராணுவம் இருந்ததால் எம்மால் குடியேற முடியவில்லை, பின்னர் இராணுவத்தினர் எம்மை அனுமதித்தார்கள் நாங்கள் சிலர் ஒன்று சேர்ந்து பயிர்செய்தோம், எம்மால் 30 வருட காடுகளை வெட்ட முடியவில்லை. பின்னர் வனலாகா அதிகாரிகள் அங்கு வந்து எம்மை தடுத்தார்கள் இது அவர்களுக்குரிய காடு என இப்படி தொடர்ச்சியாக எமக்கு அநீதியே இளைக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் பிரதேச செயலகமும் இது அரச காணியென்று எம்மை வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.
சட்டத்தை மீறி காடு வெட்டியதாக நீதிமன்றத்திற்கு அழைத்தார்கள், தீதிமன்றம் கூட எமக்கு சார்பாக நடந்திருந்தது.
நாம் காலாகாலமாக வாழ்ந்துவந்ததிற்கு ஆதாரங்களாக இருந்த காணி ஆவணங்கள், பிறப்பத்தாட்சி பத்திரம், ஆள் அடையாள அட்டை என்பன இருந்தும் எமக்கு சொந்தமான காணிக்குள் எம்மை செல்லவிடாமல் தடுக்கின்றார்கள் எங்களது காணிகளை வைத்து எமது பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூட அரசியல் நடத்துகின்றாரா என எமக்கு சந்தேகம் நிலவுவதாக இதன்போது கலந்துகொண்ட கணகர் கிராம வாசிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதன்போது கணகர் கிராம அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் வேலுப்பிள்ளை அருணாச்சலம் உள்ளிட்ட கிராமவாசிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.