தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் உட்பட மூன்று பலி!!


புத்தல மற்றும் ஸ்ரீபுர பிரதேசங்களில் நேற்று இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

திஸ்ஸபுர பிரதேசத்தை சேர்ந்த 12 மற்றும் 15 வயதான சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்களின் உடல்கள் பதவிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீபுர பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே புத்தல பிரதேசத்தில் வலயம் 2 பிரதேசத்தில் குளத்தில் மீன்பிடிக்க வலை வீசிக்கொண்டிருந்த ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.Powered by Blogger.