மகிழ்சியான செய்தி - இம்மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு!!


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை ஒன்பது இலட்சத்து 82 ஆயிரத்து 770 மேன்முறையீடுகளும் 62 ஆயிரத்து 368 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.Powered by Blogger.