குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் சம்பியன்!!


(சோபிதன்)

மட்டக்களப்பு பழுகாமம் Shooting Start விளையாட்டு கழகம் நடாத்திய மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் சம்பியனாகியுள்ளது. 

இப்போட்டியானது கடந்த 07.07.2023 அன்று பழுகாமம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இப்போட்டியில் சுமார் 15 அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நேற்று 09.07.2023 இடம்பெற்றது.

இறுதிப்போட்டிக்கு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் மட்டக்களப்பு எவர்சைன் விளையாட்டு கழகம் என்பன பலப்பரீட்சை நடாத்தின. இதன் போது 5 ற்கு 3 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

Powered by Blogger.