கல்விக்காக கரம் கொடுக்கும் ஏடு அமைப்பின் முப்பதாவது அகவை நிறைவு விழா!!

தேவையுடையோர் கல்வி அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும் தொண்டு நிறுவனமான ஏடு அமைப்பின் முப்பதாம் அகவை நிறைவு விழா மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

அமைப்பின் தலைவர் ந.ஜெபராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை, ஆவணப்படம் (VIDEO) வெளியீடு, முத்துவிழா மலர் அறிமுகமும் வெளியீடு, ஏடு அமைப்பின் உயிர்நீத்த உறுப்பினர்களுக்கான  கௌரவம் எனப்பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர் தேவகாந்தன்,  செயலாளர் எஸ்.பிறேமானந்த், பொருளாளர் கே.அருளானந்தம், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்ததுடன், குறித்த நிகழ்வானது ஏடு உறுப்பினர்கள், நலன்பெறுநர், நலன்விரும்பிகள் ஆகியோரிற்கிடையேயான ஒன்றுகூடலாகவும் அமையப்பெற்றிருந்ததுடன், வட்ஸ் (UK), ஸ்கொட் மற்றும் சுவிஸ் உதயம் ஆகிய அமைப்புக்களின் நிதி அனுசரனையுடன் ஏடு அமைப்பானது தொடர்ச்சியாக கல்விக்கான உதவி, சுனாமி, கொவிட் - 19, ஈஸ்டர்தாக்குதல் போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள், வாழ்வாதார உதவிகள் என பல்வேறு பட்ட உதவிகளை தேவையுடையோரை தேடிச்சென்று உதவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





















Powered by Blogger.