மட்டக்களப்பு மாநகர சபையின் பதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது ஆணையாளராக பொறியியலாளர் நடராஜா சிவலிங்கம் இன்று (22) மாநகர சபை அலுவலகத்தில் பதவியேற்றார்.

இன்று காலை அலுவலகத்திற்கு சமூகமளித்த புதிய மாநகர ஆணையாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றார்.

இதனையடுத்தது மாநகர உத்தியோகத்தர்களுடனான சம்பிரதாயபூர்வமான சந்திப்பொன்று நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் திரு. என்.மதிவண்ணன், மாநகரப் பொறியியலாளர் திருமதி எல்.சித்திரா தேவி, பிரதம கணக்காளர் திருமதி.ஜீ.எச்.சிவராஜா, மாநகர ஆயுர்வேத வைத்தியர் திருமதி பி.பார்த்தீபன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி கே.பிரேமகுமார், இயந்திரப் பொறியியலாளர் என்.யோகேந்திரன் உட்பட கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழிரர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிருவாக சேவை (தரம் -1) உத்தியோகத்தரான இவர் மன்னார் மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், உலக வங்கி திட்டத்தி சிமாட் கிலைமட் ஸ்ரீ லங்கா திட்டப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறுவு ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.