ஐராணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம் - ஆர்வத்துடன் இரத்த கொடை நல்கிய இளைஞர்கள்!!
ஐராணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், இரத்த கொடையினையும் நல்கியுள்ளனர்.
அருட்பணி யோயல் பிரவிந்த் தலைமையில் ஐராணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பரியோவான் கலாசார மண்டபத்தில் (13.12.2025) காலை 9 மணி முதல் இடம் பெற்ற இரத்த தான முகாம் ஐராணி அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.
குறிப்பாக மழையின் மத்தியிலும் நிகழ்வுக்கு வருகை தந்த இளைஞர் யுவதிகள் தன்னார்வமாக இரத்த கொடையினை வழங்கியதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை போக்குவதற்கு உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன்,
இரத்த கொடையாளர்களிடமிருந்து இரந்தங்களை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமையப் பெற்றுள்ள இரத்த வங்கியின் வைத்தியர்கள் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






