பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி- இருவர் கைது!!


தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மன்னார் பகுதியில், சிறுவர்களை கடத்துவதற்கு இனந்தெரியாத குழுவினர் முயற்சித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பாடசாலை வளாகங்களில் பாதுகாப்பை வழங்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தலைமன்னார் கிராமப் பகுதியில், வியாபார பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்தவர்கள், இரண்டு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி, அவர்களைக் கடத்துவதற்கு முயற்சித்ததாகவும், பொது மக்களின் உதவியுடன் அந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாக, காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.