எகெட் கரிற்றாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஊடாக ஏறாவூர் செங்கலடி பிரதேச பல் சமய ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இன ஐக்கிய இப்தார் நிகழ்வு நேற்று 17.04.2023 திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் ஹிஜ்ரா நகர், காதிரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நான்கு சமய தலைவர்களும் சமூக தலைவர்களும் நான்கு சமயத்தை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் உள்ளிட்ட மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பிரதேச பல் சமய ஒன்றியங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலம் கலந்துகொண்டதுடன், நிகழ்விற்கான ஒருங்கினைப்பினை
மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாசன் அடிகளார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













