உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் 25 ஆம் திகதி திட்டமிட்டப்படி நடத்த முடியாது என குறிப்பிட்டு சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரியினால் நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் அல்லது உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்கின் தீர்ப்பை அடுத்து தேர்தல் இடம்பெறும் புதிய தினத்தை அறிவிப்பதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் கூடிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி அறிவிப்பு இன்றி பிற்போட்டது.
இதனையடுத்து, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.