பிள்ளையான் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி








முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.













தற்போது சிறையில் உள்ள பிள்ளையான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்தார் இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் பரீசிலனைக்கு இதை எடுத்து கொண்டார்





எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 12ம் திகதியில் இருந்து 19 ம் திகதி வரையிலான காலத்திற்குள் வேட்பு மனுதாக்குதல் செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனு தாக்கலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.