மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கொரோனா தொற்று என சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இல்லை என வைத்தியசாலை நிருவாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் வந்த போரதீவுப்பற்று திக்கோடை பகுதியினை சேர்ந்த 47வயதுடைய நபர் நேற்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு கொரோனாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்துமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டமை குறிப்பிடத்தக்கது