தீவிரமடையும் கொரோனா வைரஸ்! இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை






கொரோனா வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.





அந்த வகையில், இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.







அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி சுற்றுலாக்களை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.


வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





இந்த திட்டத்தை சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பிதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ள நிலையில், இதற்கு தேவையான ஆலோசனை கடிதங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பரவி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், பாடசாலை மாணவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.





சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.


சீனாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.