பிள்ளையானிடம் மட்டு மக்களின் கோரிக்கை - பிள்ளையானின் பதில் என்ன?






நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னம் மட்டக்களப்பில் போட்டியிடாது என அறிவித்திருந்த நிலையில் மொட்டு சின்னம் மட்டக்களப்பில் போட்டியிடும் என அண்மையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் இரு முஸ்லிம் வேட்பாளர்களும் மொட்டில் போட்டியிட உள்ளதாக அறிய முடிகின்றது.







இவை ஒருபுறமிருக்க கிழக்கு தமிழ் ததலைமைகள் ஒன்றாக இணைந்து செயற்பட எடுத்த முடிவுகளை குழப்பிக்கொண்டு செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்களின் சூழ்ச்சியினால்தான் மொட்டு மட்டக்களப்பில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.





வியாளேந்திரன் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர் என்பதனால் மொட்டில் தேசியப் பட்டியல் வழங்கப்படவேண்டும் என வெளிப்படுத்தப்படாத  ஒப்பந்தம் உள்ளது. 





இதனால் தான் பாராளுமன்ற உறுப்பினராவது உறுதி என்பதனால் இன்னொருவர் குறிப்பாக பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகக்கூடாது என்பதில் வியாளேந்திரன் குறியாக உள்ளார். 





அதற்காக தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதில் பெரும் பங்கு ஹிஸ்புள்ளாவினுடையது.





மொட்டு போட்டியிடுமாக இருந்தால் இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதால் முஸ்லிம் பிரதிநிதிகளே தெரிவாகும் நிலை உருவாகும்.





இந்த நிலைகளைக் கருத்தில்கொண்டு பிள்ளையான் தெளிவான , தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என கிழக்கு மக்கள் தெரிவிக்கின்றனர். 


Powered by Blogger.