மட்டக்களப்பில் கொரோனா பரிசோதனை - உண்மை நிலை என்ன?மட்டக்களப்பு புனானே சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையகப்படுத்தி கொரோனா பரிசோதனை மையமாக மாற்றியமை மிகச்சிறந்த முடிவு...

ஹிஸ்புல்லாவினால் அங்கு உற்பத்திசெய்யப்படவிருந்த ஜிகாதிகளை விட கொரோனா ஒன்றும் ஆபத்தானதல்ல. அந்த பல்கலைக்கழகத்தை நிரந்தரமாக அரசாங்கம் பொறுப்பெடுக்கவேண்டும்.சில அறிவிலிகளுக்கு மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படுவது கொரோனோ நோயாளிகள் இல்லை வெளிநாட்டில் இருந்து வரும் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகள்தான் என்ற விடயம் தெரியாமல் இருக்கிறது.


கொரோனோ பாதிப்பு உள்ள நாடுகளென்று அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மக்கள் அடர்த்தி குறைந்த இடத்தில் தங்கவைத்து அவர்களை முழுமையாக பரிசோதித்து அதன் பின் நாட்டுக்குள் விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. முன்பு சீனாவில் இருந்து வரும் பயணிகள் மாத்திரம் பரிசோதனை செய்யப்பட்டார்கள் இவர்களை தியத்தலாவ இராணுவ முகாமில் வைத்து பரிசோதித்தார்கள் இப்போது சீனாவுக்கு வெளியே பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால் இத்தாலி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் இருந்துவரும் பயணிகளும் பரிசோதனைக்கு உற்படுத்தப்படுகின்றனர்.


இவ்வாறு வரும் பெரும் தொகையான பயணிகளை தங்கவைத்து பரிசோதிக்க மிக விசாலமான இடம் தலைநகரை அண்டி எங்கும் இல்லையென்பதால்தான் ஹிஸ்புல்லாவால் சவுதி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணம் புனேனேயில் தமிழர் காணிகளை அபகரித்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பல ஆயிரம் கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட சவுதி அரேபிய பல்கலைக்கழக வளாகம் கொரோனா பரிசோதனை மையமாக அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.


ஆயிரக்கணக்கானோரை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்கவைக்க முடியாது. இதேபோல் ஒரு பல்கலைக்கழகமோ பெரும் கட்டிடமோ தெற்கில் இருந்திருந்தால் அங்குதான் பரிசோதனை மையத்தை அமைத்திருப்பார்கள். தற்போது ஹிஸ்புல்லா அணியினர் தம்முடைய சவுதி அரேபிய பல்கலைக்கழகம் நிரந்தரமாக அரசாங்கத்திற்கு போய்விடப்போகிறதென்ற அச்சத்தில் மக்களுக்கு கொரோனா நோயாளிகளை கொண்டு வருகின்றனர். நோயால் இறந்தவர்களை இங்கு புதைக்கப்போகின்றனர் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்த முனைகின்றனர்.


மக்கள் இந்தப்போலிப்பரப்புரைக்கு செவிசாய்க்காதீர்கள் சவுதி அரேபிய பல்கலைக்கழகம் வருவதால் இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்தை விட கொரோனா ஆபத்தானது இல்லை.
Powered by Blogger.