பயங்கரவாத தடைச் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை! கெஹலிய ரம்புக்வெலபயங்கரவாதிகளுக்கு புகலிடமளிக்கும் சட்டம் நாட்டுக்கு ஒருபோதும் தேவையான ஒன்றல்ல என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
வத்தேகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,


“பயங்கரவாதிகளுக்கு புகலிடமளிக்கும் சட்டம் நாட்டுக்கு ஒருபோதும் தேவையான ஒன்றல்ல.


பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென சர்வதேசமே கூறியபோதும்கூட 30 வருட பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம். அதாவது விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இந்த பயங்கரவாத தடுப்பு சட்டமே உதவியது. ஆகவே இதில் எந்தவித தவறையும் நாம் காணவில்லை.


கடந்த அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்குவதற்காக அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றதைப்போன்று தற்போதைய அரசாங்கம் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காது.


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது எவராவது அநீதியான முறையில் கைது செய்யப்பட்டிருப்பாராயின் அதற்கு எதிராக மனித உரிமை மீறல் அல்லது ஏனைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.Powered by Blogger.