உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இன்று காலை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அல்லது புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.
அதேவேளை, முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தனவிடமும் விசாரணைகளை நடத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.