இலங்கையில் ஹோட்டல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைஎதிர்காலத்தில் உள்ளூர்வாசிகள் செல்வதற்கு தடைவிதிக்கும் ஹோட்டல்கள் அல்லது உணவகங்களின் உரிமங்களை இடைநிறுத்த அல்லது இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கையை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறித்த நிறுவனங்களுக்கு விடுத்துள்ளது.


சுற்றுலா மேம்பாட்டு ஆணைய வட்டார தகவல்களின்படி, ஹிக்கடுவ மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்களும் உணவகங்களும் வெளிநாட்டவர்கள் தவிர உள்ளூர் சுற்றுலாவாசிகள் நுழைய அனுமதிக்கவில்லை என்றுதெரிவித்துள்ளன.


உள்ளூர் மக்கள் சுற்றுலாத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்குவதால், குறிப்பாக விடுமுறை காலங்களில், அவர்கள் கொள்கைகளை மாற்றத் தவறினால், இந்த நிறுவனங்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.Powered by Blogger.