கோட்டாபயவின் கைகளுக்கு வருகிறது அதிகாரம்!மார்ச் மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கைகளுக்கு கிடைக்கும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரு தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,


“பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது.


மார்ச் மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். அத்துடன் நாடாளுமன்றம் குறிப்பிட்டவகையில் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும்.


கடந்த சில வாரங்களில், அரசியல் கலாசாரத்திற்கு முன்னேற்றமான பல விடயங்களைச் சேர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிந்துள்ளது” என்றார்.Powered by Blogger.