மகிந்த கலந்து கொள்ளவிருந்த நிகழ்விலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் மீட்புபிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த சமய நிகழ்வுக்கு முன்னதாக நடத்தப்பட்ட தேடுதலில் ஏராளமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரப்படை தெரிவித்துள்ளது.
வெடிமருந்துகள், இரண்டு ஆர்பி.ஜி தோட்டாக்கள் மற்றும் கைத்துப்பாக்கியின் ஒரு பகுதியையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.


பாணந்துறை, கொரொஸ்துவ விகாரைக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.Powered by Blogger.