கோடீஸ்வரன் மரங்களை வெட்டி விற்பதில் ஈடுபட்டுவந்தார் என கருணா அம்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கோடீஸ்வரன் ஒப்பந்தங்கள் செய்வது, மரங்களை வெட்டி விற்பது போன்ற வேலைகளை மாத்திரம் செய்தார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றம் சுமத்தியுள்ளார்.
வாழைச்சேனை கல்மடு பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் கல்மடு பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.