கிழக்கு மாகாண ஆளுநராக அனுராத யஹம்பத்தும், வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரு ஆளுநர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
வட மாகாண ஆளுநர் தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் வட மாகாண ஆளுநராக சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
