வெள்ளைவான் விவகாரம் அம்பலமாகும் பல திடுக்கிடும் உண்மைகள்


வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பில் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

வெள்ளை வான் கடத்தல் மற்றும் விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொழும்புக்கு கொண்டு வந்தமை தொடர்பில் இரு சாரதிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டது.

எனினும் குறித்த இரு சாரதிகளும் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் 20 இலட்சம் பணம் கொடுத்துள்ளதாக இருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பொய் சாட்சியத்திற்காக 30 இலட்சம் பொருந்திய நிலையில் 20 இலட்சம் முற்பணம் வழங்கியுள்ளதாகவும் இரு சாரதிகளும் மேலும் தெரிவித்துள்ளனர்.Powered by Blogger.